Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 18,December 2015
Share
SHARE

ஃபோக்ஸ்வேகன் பீட்டல் ஹேட்ச்பேக் கார் ரூ. 28.73 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. உலக பிரசத்தி பெற்ற பீட்டல் கார் இந்தியாவிற்கு சிபியூ வகையில் இறக்குமதி செய்யப்படுகின்றது.

 

கடந்த 2011ம் ஆண்டு முதல் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் சர்வதேச அளவில் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவிற்கு தற்பொழுதுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வட்ட வடிவ பை ஸெனான் முகப்பு விளக்குகளுடன் கூடிய எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் நேர்த்தியாக அமைந்துள்ள பானெட் தோற்றம் , பம்பர் தோற்றம் போன்றவை கிளாசிக்காக பீட்டல் காரின் பாரம்பரியத்திலே அமைந்துள்ளது.

நேர்த்தியாக உள்ள 17 இஞ்ச் அலாய் வீல் , பாடியுடன் இணைந்த ஸ்பாய்லர் , சூரிய மேற்கூரை , லெதர் இருக்கைகள் , 3 விதமான ஆம்பியன்ட் லைட்டனிங் , 4 விதமான வண்ணங்கள் அவை நீலம் , சிவப்பு , ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகும்.

150 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.  இதன் டார்க் 250என்எம் ஆகும். ஃபோக்ஸ்வேகன் பீட்டல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17.38 கிமீ ஆகும்.

ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் , க்ரூஸ் கன்ட்ரோல் , தானியங்கி முகப்பு விளக்குகள் , பல தகவல்களை வழங்கும் டிஸ்பிளே என பல நவீன சொகுசு அம்சங்களை பெற்றுள்ளது. மேலும் ஏபிஎஸ் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள் , 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் என பல நவீன பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட டீலர்கள் வழியாக மட்டுமே பீட்டல் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் விலை ரூ. 28.73 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

90469
4cb49 maruticiaz
b5502 flipkart2bather2bscooter
fcf2c
33cd6 fiat2b500l2bmpv
fc7dc terra2br6
citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:BeetleVolksWagen
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved