கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் வெறும் ஐந்து மாத்தில் 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளதாக, ஹோண்டா கார் இந்திய லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் – செப்டம்பர் 2018ம் கால கட்டத்தில் ஹோண்டா நிறுவன கார்கள் விற்பனையில் புதிய மாடல் அமெஸ் விற்பனை 50 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் விரைவாக 50,000 கார்கள் விற்பனையான சாதனையை ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் செய்துள்ளது. இந்த கார்கள் முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களில் 20 சதவிகிதம் பேரை கவர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில், இவை டயர் 1 சிட்டிகளில் மொத்தமாக 40 சதவிகிதம் கார்கள் விற்பனையாகியுள்ளது. மற்ற 30 சதவிகிதம் டயர் 2 மற்றும் டயர் 3 சிட்டிகளில் விற்பனையாகியுள்ளது.
இது குறித்து பேசிய ஹோண்டா கார் இந்தியா லிமிடெட் நிறுவன சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங் இயக்குனர் மகொடோ ஹயோட, புதிய அமெஸ் கார்கள் இந்திய குடும்பத்தினர் விரும்பும் ஒரு காராக விளங்கி வருகிறது.
ஐந்தே மாத்தில் 50,000 கார்கள் விற்பனை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விற்பனை உயர்வுக்கு இந்த காரில் இடம் பெற்றுள்ள CVT தொழில்நுட்பமே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதனாலேயே 30 சதவிகித வாடிக்கையாளர்கள் அமெஸ் காரை வாங்கியுள்ளனர். மேலும் இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்சன்களில் வெளியான இதன் சிறப்பாகும்
இந்த கார்களுக்கு 3 ஆண்டு அன்லிமிடெட் கிலே மீட்டர் வாரண்ட்டி மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இந்த காரை வாடிக்கையாளர்களை வாங்க செய்துள்ளதாக தெரிகிறது.