Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் அறிமுகமானது 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்

by automobiletamilan
September 24, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் துவக்க விலையாக 40 லட்சம் ரூபாய் (இந்தியாவில் எக்ஸ் ஷோ ரூம் விலை) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட சி-கிளாஸ்களில் டீசல் ஆப்சன்களுடன் C 220 d பிரைம், C 220 d ப்ரோக்ரேச்சிவ் மற்றும் C 300 d எஎம்ஜி லைன் என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றில் கடைசி இரண்டு வகைகளும் முறையே 44.25 லட்ச ரூபாய் மற்றும் 48.50 லட்சம் ரூபாயாகும். இந்த விலைகள் இந்தியாவில் எக்ஸ் ஷோ ரூம் விலைகளாகும்.

உண்மையில், இது நம் எதிர்பார்க்கப்பட்ட விலையை போன்றே உள்ளது. தற்போதைய ஜெனரேசன் C-கிளாஸ் (W205) கார்கள் கடந்த 2014ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கு பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெளியாகியுள்ள காரில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவன விற்பனை & சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் மைக்கேல் ஜோப், தெரிவிக்கையில், இந்த மாடல்களுக்கான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது, C-கிளாஸ் கார்களின் வரலாற்றில் செய்யப்பட்ட மிகபெரிய ஒன்றாகும். இந்த காரில் மொத்தமாக 6,500 உபகரணங்களை மாற்றியுளோம். இதில் இடம் பெற்றுள்ள பாதிக்கும் மேற்பட்ட உபகரணங்கள், C-கிளாஸ் செடான்களுக்கானதாகும்.

இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார்கள் ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்றும் மிகவும் டைனமிக்காகவும், எல்லா நேரங்களிலும் சிறப்பானதாகவும் இருக்கும். எப்போதும் இது நிறுத்தப்படாது என்று கருத்துகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. புதிய C-கிளாஸ் கார்கள் பல்வேறு வகையான தொழில்நுட்பகள் மற்றும் வசதிகளுடன் உருவாகப்பட்டுள்ளதால், ஒட்டி செல்லும் போது மகிழ்ச்சியை உண்டாக்கும். அதுமட்டுமின்றி ஆடம்பர காராகும் இருக்கும். இந்த வசதிகள், டாஷ் போர்டிற்கு புதிய வடிவத்தையும், தனித்துவமிக்க டிசைனையும் கொடுக்கும்.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் செடான்கள், சில விஷ்வல் மாற்றங்களுடன், புதிய வசதிகளுடனும் மற்றும் அதிக திறன் கொண்ட பவர்டிரெயின் ஆப்சன்களுடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறமாக பார்க்கும் போது 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கார்களில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் வசதிகளை கொண்டுள்ளது. எ-கிளாஸ் வகைகளில் உள்ள சிக்னேச்சர் டைமண்ட்-பேர்ட்டன் கிரில் டிசைன்களையும் கொண்டுள்ளது. இந்த டிசைன்கள் C300d எஎம்ஜி லைன் வெர்சன்களில் கிடைக்கிறது. C220d வகைகளில் இரண்டு ஸ்லாட் குரோம் கிரில் பொருத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி புதிய LED ஹெட்லேப், LED டே டைம் ரன்னிங் லேம்ப்கள் மற்றும் புதிய பிராண்ட் பம்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய அலாய் வீல்கள் மற்றும் பின்புறமாக சிறிதளவு மேம்படுத்தப்பட்ட ORVM-கள், புதிய LED டைல்லேம்களும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உள்புறத்தில் C-கிளாஸ் கார்களில், புதியதாக 10.25 இன்ச் மீடியா டிஸ்பிளே ஸ்கீரின் மற்றும் புதிய ஜெனரேசன் டெலிமேட்டிக்ஸ், NGT 5.5 ஸ்மார்ட்போன் இன்டகிரேட்டட் தோற்றம் மற்றும் கனெக்டிவிட்டி லைனைகளையும் கொண்டுள்ளது. எஎம்ஜி லைன் இன்டீரியர்களுடன் சி-300 d ஸ்போர்ட்ஸ் ஆப்சன்களுடன் சேடல் பிரவுன் மற்றும் பிளாக் அப்ஹோல்ச்டரி ஆப்சன்களை கொண்டுள்ளது.

இந்த கார்கள் டீசல் வகைகளில் மட்டுமே கிடைகிறது. இதுவரை நிறுவனம் பெட்ரோல் கார்களை அறிமுகம் செய்யவில்லை. மேலும் நிறுவனம், தனது சி300d கார்களை அதிக ஆற்றல் கொண்ட டீசல் இன்ஜின்களாக மாற்றியுள்ளது. 2-லிட்டர் இன்ஜின்கள் 241bhp மற்றும் 500Nm அதிகபட்ச டார்க்யூவை கொண்டிருக்கும். இந்த கார்கள் 0-100kmph வேகத்தை 5.9 செகண்டுகளில் எட்டி விடும். சி-கிளாஸ் கார்கள் 2-லிட்டர் இன்ஜின்களுடன் 192bhp மற்றும் 400Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் 0-100kmph வேகத்தை எட்ட 6.9 செகண்டுகள் எடுத்துக் கொள்ளும். மார்க்கெட்டை தவிர்த்து புதிய சி-கிளாஸ் கார்கள் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி A4 மற்றும் ஜாகுவார் XE கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Tags: IndiaLaunchedRs 40 lakhஇந்தியாவில்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan