பிரசத்தி பெற்ற மாருதியின் சுசூகி ஆல்ட்டோ (Maruti Suzuki Alto) காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ஆல்ட்டோ மாடலில் பல்வேறு தோற்ற மாறுபாடுகள் உட்பட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் மற்றும் இன்டிரியரில் சில மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
குறைந்த விலை சந்தையில் தொடர்ந்து முதன்மையான கார் மாடலாக விளங்கி வரும் மாருதி ஆல்ட்டோ காரில் 800 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. மேலும் டீலர்களிடம் புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
புதிய மாருதி சுசூகி ஆல்ட்டோ 800
பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள், தோற்ற அமைப்பில் குறிப்பிடதக்க மாற்றங்கள் மற்றும் இன்டிரியரில் கூடுதல் வசதிகள் போன்றவற்றை இந்த காரானது பெற்று விளங்குகின்றது.
தோற்றத்தில் முன்பக்க கிரில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட, புதிய பம்பர், அகலமான ஏர் இன்டேக், மெஸ் கிரில் போன்றவற்றை பெற்றுள்ளதால் வாகனத்தின் ஸ்டைலிஷ் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டு வந்த ஆல்ட்டோ 800 பேட்ஜ் கைவிடப்பட்டு ஆல்ட்டோ என மட்டும் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, இன்டிரியர் அமைப்பில் இந்த காரில் இரு நிற கலவையிலான டேஸ்போர்டு, ஆல்ட்டோ கே10 காரிலிருக்கின்ற ஸ்டீயரிங் வீல், அடிப்படை வேரியன்டில் பொழுதுப்போக்கு சார்ந்த ஆக்ஸ் மற்றும் யூஎஸ்பி ஆதரவு வழங்கியுள்ளது.
புதிய மாருதி காரில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக ஒட்டுநர் ஏர்பேக் உட்பட ஏபிஎஸ் உடன் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட், சீட் பெல்ட் ரிமைன்டர் போன்றவற்றை கொண்டிருப்பதுடன், Automotive Industry Standard (AIS) 145 பாதுகாப்பினை கொண்ட ஸ்டீல் வடிவமைக்கப்பட்டிருக்கும். டாப் வேரியன்டில் இரு ஏர்பேக்குகள் உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அக்டோபர் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கின்றது.
47 Hp குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 799 சிசி என்ஜின் அதிகபட்சமாக 69 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது. அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய ஆல்ட்டோ காரின் விலை ரூ. 2.80 லட்சத்தில் விற்பனையக விலை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ காருக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
image source -gyani enough,team-bhp