டாடா மோட்டார்சின் ஹெக்ஸா எம்பிவி ரக மாடலில் கூடுதல் அம்சங்களை இணைத்து 2019 டாடா ஹெக்ஸா கார் மாடல் 12.99 லட்சம் ரூபாய் முதல் 18.37 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற பொலிவில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றிருக்கின்ற ஹெக்ஸா காரின் என்ஜினில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
2019 டாடா ஹெக்ஸா காரின் என்ஜின் மற்றும் சிறப்புகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான விலையில் ஹெக்ஸா அமைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் ஹெக்ஸா மாடலை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டு டாப் வேரியன்டில் மட்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2019 டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் என்ஜின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லதாகும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (XM மற்றும் XT வேரியன்டில் ) என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது.
7.0 அங்குல ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன், வீடியோ பிளேபேக் வசதி, கனெக்ட் நெக்ஸ்ட், அவசர உதவி, பார்க்கிங் உதவி மற்றும் 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இன்டிரியரில் க்ரோம் பூச்சூ மற்றும் மேற்கூறையில் இன்ஃபினிட்டி பிளாக் மற்றும் டைட்டானியம் க்ரே நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹெக்ஸா XE, XM, XM+ மற்றும் XMA போன்ற குறைந்தபட்ச வேரியன்ட்களின் விலையில் மாற்றமில்லை. ஆனால் டாப் வேரியண்ட்களான XT, XTA மற்றும் XT 4×4 ஆகியவை அதிகபட்சமாக ரூபாய் 20,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2019 டாடா ஹெக்ஸா கார் விலை பட்டியல்
ஹெக்ஸா XE 4×2 ரூ. 12.99 லட்சம்
ஹெக்ஸா XM 4×2 ரூ. 14.38 லட்சம்
ஹெக்ஸா XM+ 4×2 ரூ. 15.47 லட்சம்
ஹெக்ஸா XMA 4×2 ரூ. 15.63 லட்சம்
ஹெக்ஸா XT 4×2 ரூ. 17.04 லட்சம்
ஹெக்ஸா XTA 4×2 ரூ. 18.20 லட்சம்
ஹெக்ஸா XT 4×4 ரூ. 18.37 லட்சம்
(விற்பனையக விலை டெல்லி )