ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ள 2020 ரேபிட் காரில் 1.0 TSI என்ஜின் பொருத்தி ரூபாய் 7.49 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 11.79 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்துள்ளது.
முன்பாக இந்த கார் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்று வந்த நிலையில் இப்போது இந்த இரண்டு என்ஜினும் கைவிடப்பட்டு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 110 ஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வெளியாகலாம்.
ரேபிட் 1.0 TSI காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.97 கிமீ ஆக ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. இரு நிறத்தினை கொண்ட இன்டிரியரில் வழக்கமான அதே அமைப்புகளை கொண்டுள்ள இந்த மாடலின் டாப் வேரியண்டில் மட்டும் சற்று கூடுதலான வசதிகளாக 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றை கொண்டுள்ளது.
ஸ்கோடா ரேபிட் காரில் நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி, ரியர் பார்க்கிங் சென்சார், 16 அங்குல வீல், ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர், எல்இடி டி.ஆர்.எல் போன்றவற்றை பெற்றுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரீஸ், மற்றும் பிரபலமான ஹோண்டா சிட்டினாகிய கார்களை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.
2020 ஸ்கோடா ரேபிட் விலை பட்டியல்
Rapid Rider – ரூ. 7.49 லட்சம்
Rapid Ambition – ரூ. 9.99 லட்சம்
Rapid Onyx – ரூ. 10.19 லட்சம்
Rapid Style – ரூ. 11.49 லட்சம்
Rapid Monte Carlo – ரூ. 11.79 லட்சம்
( விற்பனையக விலை இந்தியா)