ரேபிட் ரைடர் மாடலை விட சற்று கூடுதலான ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்டில் கூடுதலான நிறங்கள் மற்றும் 6.5 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக விற்பனைக்கு ரூ.7.99 லட்சத்தில் அமைந்துள்ளது.
செடான் ரக சந்தையில் மிக சிறப்பான வசதிகளை கொண்ட ரேபிட் ரைடர் வேரியண்டில் உள்ள வசதிகளுடன் வித்தியாசப்படும் வகையில் வெள்ளை, கார்பன் ஸ்டீல் நிறத்துடன் கூடுதலாக பிரவுன், பிர்லியன்ட் சில்வர் நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக புதிய வேரியண்டில் 6.5 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் வாயிலாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்மார்ட் மிரர் லிங்க் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ரேபிட் ரைடர் வேரியண்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம் கொண்டுள்ளது.
999cc 3 சிலிண்டர் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 110 PS பவர் மற்றும் 175 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.97 கிமீ ஆகும்.
ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் காரில் அடிப்படையான இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. ரேபிட் ரைடர் வேரியண்ட்டை விட ரூ.50,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா)