இந்தோனேசியா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரினை இந்திய சந்தையில் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை கிரெட்டா எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக விளங்குகின்ற இந்தோனேசிய மாடலில் இடம்பெற்றுள்ள மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்.
2022 ஹூண்டா கிரெட்டா
தோற்ற அமைப்பில் இந்தோனேஷியா க்ரெட்டாவில் அதிகளவில் முன்புற கிரில் அமைப்பில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளது. புதிய டூஸான் காரில் காணப்படும் வடிவமைப்பை நினைவூட்டுகின்ற புதிய க்ரெட்டா ஸ்போர்ட்டிவான ஹூண்டாயின் புதிய ‘பாராமெட்ரிக் கிரில்’ வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. LED பகல் நேர ரன்னிங் விளக்குகளை நேர்த்தியாகவும், புராஜெக்டர் எல்இடி விளக்கினை பெற்றுள்ளது.
பக்கவாட்டில் பெரிதாக மாற்றமில்லாமல் அமைந்திருக்கின்ற இந்த காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகள், பம்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் விற்பனையில் உள்ள கிரெட்டா காரில் கொடுக்கப்பட்டுள்ள டேஸ்போர்ட், இருக்கை அமைப்பினை பெற்றிருந்தாலும் பல்வேறு ஸ்டைலிஷான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.10.25 டிஜிட்டல் கிளஸ்ட்டருடன், 8.0 அஃகுல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் BlueLink கனெக்டேட் நுட்பத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஆஸ்டர், எக்ஸ்யூவி 700 மாடல்களில் உள்ள Advance Driver Assist Systems (ADAS) சிஸ்டத்தை கிரெட்டா பெற்றுள்ளது. எனவே, புதிய கிரெட்டா விற்பனைக்கு வரும் போது இந்த வசதியை எதிர்பார்க்கலாம்.
இந்தோனேசியாவில் 115hp மற்றும் 144Nm, 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பத்துடன் மட்டும் கிடைக்கின்றது.
இந்திய சந்தையில் புதிய கிரெட்டா காரை ஹூண்டாய் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.