2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி படங்கள் வெளியானது

Nexon suv fr

புதுப்பிக்கப்பட்ட பல்வேறு டிசைன் மாற்றங்கள் உட்பட கூடுதல் வசதிகளை பெற்றதாக டாடா நெக்ஸான் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்பட உள்ள நிலையில் காரின் தோற்றம் மற்றும் இன்டிரியர் படங்கள் கசிந்துள்ளது.

2023 ஆட்டோ எக்ஸ்போவில் வந்த கர்வ் கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைப்பினை பெற்றதாக நெக்ஸான் எஸ்யூவி அமைந்துள்ளது. பெரும்பாலான இண்டிரியர் டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

2023 Tata Nexon

முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சத்தை பெற்று நேர்த்தியான மெல்லிய தட்டையான எல்இடி ரன்னிங் விளக்குகள், புதிய ஹெட்லைட் கீழ் பகுதியில் பனி விளக்கு இணைக்கப்பட்டு, பம்பர் ஆனது மேம்பட்டு செங்குத்தான கிரில், கீழ்பகுதியில் கிளாடிங் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்பாக பக்கவாட்டில் வழங்கப்பட்டிருந்த கிளாடிங் நீக்கப்பட்டு, நேர்த்தியான வீல் ஆர்சு பெற்ற இரு வண்ண கலவையில் அலாய் வீல் கொண்டுள்ளது. மேற்கூறையில் எந்த மாற்றமும் இல்லை. பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பர் எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களையும் பெற உள்ளது.

இன்டிரியரில் பெரும்பாலான கண்ட்ரோல் மேனுவல் சுவிட்சுகள் நீக்கப்பட்டு அனைத்தும் தொடுதிரை அமைப்புடன் கூடியதாக அமைந்துள்ளது. இரண்டு ஸ்போக் பெற்ற ஸ்டீரிங் வீல் மத்தியில் கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன.10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு நவீனத்துவமான அம்சங்களை பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்தவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.

new Nexon interior vs old

இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் பல்வேறு மேனுவல் பிசிக்கல் சுவிட்சுகளுக்கு பதிலாக HVAC சுவிட்சுகள் தொடுதிரை அம்சத்துடன் இணைக்கப்பட்டதாக வரவுள்ளது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக வரவுள்ளது.

புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும்  115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனை வழங்கும். மேலும் விவரங்கள் செப்டம்பர் மாதம் மத்தியில் விற்பனைக்கு வெளியாகும். புதிய காரின் வடிவமைப்பினை நெக்ஸான் மின்சார EV காரிலும் கிடைக்கும்.

கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 மற்றும் மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களை டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் எஸ்யூவி எதிர்கொள்ளும்.

2023 nexon suv rear

image source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *