இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் ADAS பெற்றுள்ள கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை ரூ.7.99 லட்சம் ஆக துவங்குவதனால் தமிழ்நாட்டின் ஆன ரோடு விலை மற்றும் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கிகர் உள்ளிட்ட மாடல்களை கியா சொனெட் எதிர்கொள்ளுகின்றது.
Kia Sonet 2024
டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 விதமான பிரிவுகளில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் பெற்று 6 விதமான கியர்பாக்ஸ் பெற்று மொத்தமாக 19 விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
82 hp பவர், 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கொண்டு ஆரம்ப நிலை வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கின்றது.
118 hp பவருடன் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும்.
இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.
மேலும் படிக்க – கியா சொனெட்டின் மைலேஜ் விபரம்
Engine | Transmission | Variant | Ex-showroom price | on road price |
1.2-litre NA petrol | 5 MT | HTE | ₹ 7,99,000 | ₹ 9,56,156 |
HTK | ₹ 8.79,000 | ₹ 10,52,456 | ||
HTK+ | ₹ 9,90,000 | ₹ 11,83,654 | ||
1.0-litre turbo petrol | iMT | HTK+ | ₹ 10,49,000 | ₹ 13,08,781 |
HTX | ₹ 11,49,000 | ₹ 14,31,045 | ||
HTX+ | ₹ 13,39,000 | ₹ 16,63,561 | ||
7 DCT | HTX | ₹ 12,29,000 | ₹ 15,28,761 | |
GTX+ | ₹ 14,50,000 | ₹ 17,99,111 | ||
X-line | ₹ 14,69,000 | ₹ 18,22,504 | ||
1.5-litre diesel | 6 MT | HTE | ₹ 9,79,000 | ₹11,71,876 |
HTK | ₹ 10,39,000 | ₹ 13,04,781 | ||
HTK+ | ₹ 11,39,000 | ₹ 14,25,045 | ||
HTX | ₹ 11,99,000 | ₹ 14,98,340 | ||
HTX+ | ₹ 13,69,000 | ₹ 17,07,561 | ||
6 iMT | HTX | ₹ 12,60,000 | ₹ 15,73,651 | |
HTX+ | ₹ 14,39,000 | ₹ 17,93,652 | ||
6 AT | HTX | ₹ 12,99,000 | ₹ 16,23,645 | |
GTX+ | ₹ 15,50,000 | ₹ 19,33,546 | ||
X-Line | ₹ 15,69,000 | ₹ 19,56,421 |
(All on road Price in Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.
புதிய சோனெட் 10 விதமான ADAS நிலை 1 பாதுகாப்பு தொகுப்பினை கொண்டுள்ள வசதிகளின் விபரம் பின்வருமாறு;-
1. முன்புற மோதல் எச்சரிக்கை (FCW)
2. முன்புற மோதல் தவிர்க்கும் உதவி பாதசாரி (FCA- Pedestrian)
3. முன்புற மோதல் தவிர்க்க சைக்கிள் ஓட்டுபவர்- (FCA-Cyclist)
4. முன்புற மோதல் தவிர்க்க கார்- (FCA-Car)
5. முன்பாக உள்ள வாகனம் புறப்படும் எச்சரிக்கை – (LVDA)
6. லேன் மாறுபாடு எச்சரிக்கை- (LDW)
7. லேன் கீப் அசிஸ்ட்- (LKA)
8. லேன் ஃபாலோயிங் அசிஸ்ட்- (LFA)
9. உயர் பீம் உதவி- (HBA)
10. ஓட்டுனர் கவனத்தை அறிந்து எச்சரிக்கை- (DAW)
குறிப்பாக அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பு டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது.