ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
கிரெட்டாவின் முகப்பில் வழங்கப்பட்டு வந்த கிரில் அமைப்பில் புதிய கேஸ்கேடிங் அமைப்புடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது.
காரின் பக்கவாட்டினை பொறுத்தவரை புதிய இரட்டை நிறத்திலான அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட வீல் ஆர்ச் கொண்டுள்ளது. அதேபோல, பின்புறத்தில் விற்பனையில் உள்ள மாடலின் எல்இடி டெயில் லைட் பெற்றிருப்பதுடன் பம்பரில் சிறிய அளவிலான மாறுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் கருப்பு மற்றும் பீஜ் நிறத்திலான டாஷ்போர்டு மிக நேரத்தியான வடிவமைப்பைப் பெறுகிறது. இந்த மாடலில் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்டீயரிங்கில் ஆடியோ, புளூடூத் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் கட்டுப்பாடுகளைப் பெறுகிறது.
ஏசி வென்ட்களுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் திரையுடன் இந்த கார் முழு டிஜிட்டல் கிளஸ்டரை பெறுவதுடன், இதில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியை பெறுகின்றது. எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்படுகின்றது.
கிரெட்டா எஸ்யூவி காரில் தற்போது பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று என்ஜினை பெற உள்ளது. குறிப்பாக இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினை பெறுகின்றது.
என்ஜின் | பவர் | டார்க் | கியர்பாக்ஸ் | மைலேஜ் |
1.5L பெட்ரோல் | 115 PS | 144 Nm | 6 வேக MT | 16.8 km/l |
1.5L பெட்ரோல் | 115 PS | 144 Nm | CVT | 17.1 km/l |
1.4L டர்போ பெட்ரோல் | 140 PS | 242 Nm | 7 வேக DCT | 16.8 km/l |
1.5L டர்போ டீசல் | 115 PS | 250 Nm | 6 வேக MT | 21.4 km/l |
1.5L டர்போ டீசல் | 115 PS | 250 Nm | 6 வேக AT | 18.3 km/l |
செல்டோஸ் மாடலுக்கு மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவல்ல கிரெட்டா காரும் ஒரே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு ஒரே என்ஜின்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.
2020 ஹூண்டாய் கிரெட்டா விலை பட்டியல்
Hyundai Creta Variants | Petrol 1.5 MPi | Petrol 1.4 GDI | Diesel 1.5 CRDi |
---|---|---|---|
E | – | – | ரூ. 9.99 லட்சம் |
EX | ரூ. 9.99 லட்சம் | – | ரூ. 11.49 லட்சம் |
S | ரூ. 11,72 லட்சம் | – | ரூ. 12.77 லட்சம் |
SX | ரூ. 13,46 லட்சம் | – | ரூ. 14.51 லட்சம் |
SX (AT/iVT/DCT) | ரூ. 14,94 லட்சம் | ரூ. 16.16 லட்சம் | ரூ. 15.99 லட்சம் |
SX(O) | – | – | ரூ. 15.79 லட்சம் |
SX(O) (AT/iVT/DCT) | ரூ. 16.15 லட்சம் | ரூ. 17.20 லட்சம் | ரூ. 17.20 லட்சம் |
இந்த மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.