தற்போது இந்தியாவின் ஆறு மாநிலங்களில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் க்யூட் கார் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
குஜராத், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
பஜாஜ் க்யூட் விலை மற்றும் சிறப்புகள்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ள தனிநபர் பயன்பாட்டிற்கான க்யூட் விலை ரூபாய் 2.48 லட்சம் எனவும், வர்த்தக் ரீதியான சிஎன்ஜி பெற்ற க்யூட் விலை ரூ.2.78 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 ஸ்பார்க் பிளக்குகளை பெற்ற 216 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
பஜாஜ் க்யூட் மினி காரின் மைலேஜ் லிட்டருக்கு 36 கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலை எக்ஸ்பிரஸ் சாலைகளில் இயக்க வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது. 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்ரிசைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.