பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினுடன் மேம்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ காரில் தோற்ற அமைப்பில் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்4 மாடலை விட அதிகபட்சமாக ரூ.70,000 வரை விலை உயர்த்தப்பட உள்ள பொலிரோவில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளும் இணைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த மாடலில் B4, B6 மற்றும் B6 (O) மூன்று விதமான வேரியண்டுகள் இடம்பெற உள்ளது. மெட்டல் பம்பரை பெற்று பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் முதல் பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது கட்டாயமாகும்.
ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா பொலிரோ காரில் புதுப்பிக்கப்பட்ட முன்பக்க கிரில், புதிய ஹெட்லைட், புதிய ரேடியேட்டர் கிரில், பாடி கிராபிக்ஸ் போன்றவற்றினை பெற்றிருக்கின்றது. முந்தைய mHawk70 என்ஜினுக்கு மாற்றாக புதிய mHawk75 என்ஜின் பெற்றதாக பொலிரோ பவர் பிளஸ் பெற்றுள்ளது. முன்பாக 70 ஹெச்பி பவரை வெளிப்படுத்தி வந்த இந்த என்ஜின் இப்போது அதிகபட்சமாக 75 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
புதிய மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை ரூ.8.06 லட்சத்தில் துவங்குகின்றது.
B4 ரூ. 8.06 லட்சம்
B6 ரூ. 8.72 லட்சம்
B6 (O) ரூ. 9.08 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் சென்னை)