இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பெரும்பாலான குறைந்த விலை பட்ஜெட் ரக கார் மாடல்களுக்கு அடிப்படை வேரியண்டில் ஒரு ஏர்பேக் மட்டுமே பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இனி இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயமாக்க வேண்டும் என்ற வரைவு கொள்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.
புதிதாக விற்பனைக்கு வரவுள்ள அனைத்து கார்களில் கட்டாயம் இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தியிருக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளது. இதன் காரணமாக கார்களின் விலை கணிசமாக ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதியின் ஆல்ட்டோ, வேகன் ஆர், எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ மற்றும் ஈக்கோ ஆகியவற்றில் ஒற்றை ஏர்பேக் மட்டுமே குறைந்த விலை வேரியண்டுகளில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் இந்த மாடல்களில் ஆப்ஷனலாக மட்டும் உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பைகள் இடம்பெற்றுள்ளன.
மாருதி மட்டுமல்ல ஹூண்டாய் சான்ட்ரோ, டட்சன் ரெடி-கோ, ரெனோ க்விட் மற்றும் மஹிந்திரா பொலிரோ ஆகியவற்றின் குறைந்த விலை வேரியண்டுகளிலும் இதே நிலைதான் தொடர்கின்றது.
updated;-
ஏப்ரல் 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய மாடல்களும், ஜூன் 1 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட மாடல்களும் இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் புதிய வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர் 28 தேதியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு டிசம்பர் 28 முதல் அடுத்த 30 நாட்களுக்குள் பொது மக்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை கேட்டுள்ளது.