பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி 500 காரில் பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடலின் நட்ப விபரங்களை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் W3 பேஸ் வேரியண்ட் நீக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கைவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஎஸ் 6-ல் 2.2 லிட்டர் (eVGT), mHawk டீசல் என்ஜின் அதிகபட்சமாக 153 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க உள்ளது.
W5, W7, W9, W11(O), W7 AT, W9 AT மற்றும் W11(O) என மொத்தமாக 7 வேரியண்டுகளை பெற உள்ள இந்த மாடலின் டாப் வேரியண்டில் ஆப்பிள் கார் பிளே, கனெகட்டிவிட்டி ஆப்ஸ், டூயல் ஏர்பேக் உட்பட கனுக்கால் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் பிஎஸ்6 வாகனங்களை மஹிந்திரா உற்பத்தி மேற்கொள்ளவில்லை என்பதனால் விலை இப்போது அறிவிக்கப்பட வில்லை.
முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 போன்றவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது.