இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையிலான 7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் (Alcazar) காரை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் சாலை சோதனை ஓட்டத்தை இந்தியாவிலும் துவங்கியுள்ளது.
தென் கொரியாவில் முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த 7 இருக்கை கிரெட்டா எஸ்யூவி கார் இந்தியாவில் சாலை சோதனை செய்யப்படுகின்ற படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது.
புதிய ஹூண்டாய் அல்கசார் எதிர்பார்ப்புகள்
5 இருக்கை பெற்ற கிரெட்டா அடிப்படையிலான 7 இருக்கை பெற உள்ள காரில் முன்புற பம்பர், கிரில் அமைப்பில் ஸ்லாட்டிற்கு பதிலாக ஸ்டட்டு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் அமைப்பில் சிறிய மாற்றங்களை பெற்று ஹெட்லைட், டெயில் லைட்டில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டிருக்கலாம். பின்புற சக்கரங்களுக்கு பிறகு மட்டும் கூடுதலான நீளத்தை கொண்டிருக்கும்.
இன்டிரியரில் இடம்பெற உள்ள மாற்றங்கள் குறித்து எந்த உறுதியான படங்களும் வெளிவரவில்லை. ஆனால் கிரெட்டா காரின் இன்டிரியரை போலவே அமைந்து 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டதாகவும், இரு வரிசை இருக்கைக்கு பதிலாக மூன்று வரிசை இருக்கை பெற்று 7 இருக்கைகளை கொண்டிருக்கும்.
அல்கசார் இன்ஜின்
கிரெட்டா காரில் மூன்று இன்ஜின் இடம்பெற்றுள்ள நிலையில் அல்கசாரில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன் அதாவது, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும், டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் மேனுவல், 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.
அல்கசார் போட்டியாளர்கள் யார் ?
மஹிந்திரா எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர் பிளஸ், வரவிருக்கும் டாடா கிராவிட்டாஸ் மற்றும் காம்பஸ் 7 இருக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.11 லட்சம் முதல் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாக உள்ளது.