ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

ஹோண்டா கார் விலை

விலை உயர்வு குறித்த அறிக்கை வெளியிட்டுள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், உயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, நிலையற்ற அந்நிய செலாவணி விகிதங்கள் காரணமாக விலை உயர்த்துவதனை தவிரக்க இயலவில்லை என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குநர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு ராஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதிகபட்மாக ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற மாடல்கள் அனைத்தும் ரூ.7,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு பிப்ரவரி 1ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பிரியோ கார் மாடலை ரூ.4.31 லட்சம் முதல் ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் மாடல் ரூ.43.21 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகின்றது.