ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சென்னையில் முதற்கட்டமாக 200 எலிவேட் எஸ்யூவி கார்களை டெலிவரி வழங்கியுள்ளது.
எலிவேட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Honda Elevate
1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமாக கிடைக்கின்றது.
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை ரூபாய் 11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.