வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகத்திற்கு வரவிருக்கும் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி மாடலின் மாதிரி வரைபடம் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள கிரெட்டா 5 இருக்கைகளை கொண்ட மாடலை அடிப்படையாக கொண்ட 6 மற்றும் 7 இருக்கைகள் பெற்ற காராக விளங்க உள்ளது.

தோற்ற அமைப்பு உட்பட பல்வேறு வசதிகள் கிரெட்டா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அல்கசாரில் 6 கேப்டன் இருக்கை கொண்ட மாடலாகவும், 7 இருக்கை கொண்ட மாடலாகவும் வரவுள்ளது. காரின் தோற்ற அமைப்பில் பின்புற சி-பில்லர் பகுதியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, டெயில் கேட் பகுதி மாற்றியமைக்கப்பட்டு, டெயில் விளக்குகள், பம்பர் உள்ளிட்டவை மட்டும் சிறிதான மாற்றங்களை கொண்டிருக்கும். முன்புறத்தில் கிரில் அமைப்பு மற்றும் பம்பரில் மட்டும் கிரெட்டா காரின் தோற்றத்திலிருந்து வித்தியாசப்படும் வகையில் அமைந்திருக்கும்.

இன்டிரியரில் டேஸ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் அமைப்பில் கிரெட்டா காரினை பின்பற்றியும், சில கூடுதலான டிசைன் மாற்றங்கள், அப்ஹோல்ஸ்ட்ரி, இருக்கை உறைகளில் மாற்றங்கள் அமைந்திருக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள், நவீனத்துவமான கனெக்டிவ் சாந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ADAS தொழில்நுட்பம் இதனை வெளிநாடுகளில் ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் என குறிப்பிடுகின்றது.

ஃபார்வர்ட் மோதல் தடுக்க தானியங்கி அவசரகால பிரேக்கிங் தொழில்நுட்பம், பிளைன்ட் ஸ்பாட் மோதல் தவிர்ப்பு உதவி, ரிவர்ஸ் மாறும்போது தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் பின்புற போக்குவரத்து எச்சரிக்கை போன்ற ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் அம்சங்களில் இடம்பெற்றிருக்கலாம்.

அல்கசார் இன்ஜின்

இந்த மாடலில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷன் குறித்து எந்த தகவலும் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும், கிரெட்டாவில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும், டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் மேனுவல், 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

அறிமுக விபரம்

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படலாம். இந்தியாவில் கிடைக்கின்ற எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா சஃபாரி மற்றும் வரவிருக்கும் காம்பஸ் 7 இருக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.12 லட்சம் முதல் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.