Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாய் ஆரா காரின் விற்பனை தேதி வெளியானது

by automobiletamilan
December 27, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

Hyundai Aura Car

முன்பாக எக்ஸ்சென்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட காரின் மேம்பட்ட மாடலாக ஹூண்டாய் ஆரா செடான் ரக மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் ரக காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள புதிய ஆரா காரில் மிக நேரத்தியான தனது பாரம்பரிய கிரில் அமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு அதன் இறுதியில் இணைக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டதாக அமைந்துள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற இந்த செடான் ரக மாடலின் இன்டிரியர் காட்சிப்படுத்தப்படாத நிலையில், இதன் அமைப்பு புதுப்பிக்கப்பட்ட புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் இன்டிரியரை பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

மேலும், டாப் வேரியண்டுகளில் ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம், 5.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், சென்டரல் கன்சோலில் 8.0 அங்குல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ப்ளூலிங்க் டெக்னாலாஜிக்கு மாற்றாக ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட் ஆப் வசதியை பெற்றிருக்கின்றது.

Hyundai Grand i10 Nios

ஹூண்டாயின் புதிய ஆரா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற மூன்று விதமான என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அவை, 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும்.

83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் உற்பத்தி செய்கின்ற1.2 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சிஎன்ஜி வகையில் வரும்போது 72 ஹெச்பி பவர் மற்றும் 101 என்எம் டார்க் உற்பத்தி செய்யவல்லதாகும்.  இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. சிஎன்ஜி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

75 ஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க்  உற்பத்தி செய்கின்ற 1.2 டீசல் ஈக்கோ டார்க் என்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

Hyundai Aura Front

பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்  இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஜனவரி 21, 2020 முதல் விற்பனைக்கு ஆரா செடான் கார் கிடைக்க உள்ள நிலையில், இந்த மாடலுக்கு போட்டியாக மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற செடான்களுக்கு போட்டியாக விளங்கும். மேலும, ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பிரைம் வேரியண்ட் டாக்சி சந்தைக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

hyundai aura closeup hyundai aura rear

Tags: Hyundai Auraஹூண்டாய் ஆரா
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan