இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரகளில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனம் டூஸான், கோனா இவி, உட்பட ஐ20, வெனியூ என பல்வேறு மாடல்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.4,00,000 வரை சலுகையை பிப்ரவரி 2024 மாதத்திற்கு அறிவித்துள்ளது.
குறிப்பாக கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு ரூ.4,00,000 லட்சமும், ஹூண்டாய் டூஸான் டீசல் மாடலுக்கு ரூ.2,00,000 லட்சம் விலை ரொக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஹூண்டாயின் 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு தோராயமாக ரூ.3,00,000 முதல் ரூ.4,00,000 வரை ரொக்க தள்ளுபடியை வேரியண்ட் மற்றும் கையிருப்பில் உள்ள எண்ணிக்கையை பொறுத்து கிடைக்கலாம்.
2023 டூஸான் டீசல் எஸ்யூவி காருக்கு மாடல் அதிகபட்சமாக ரூ 2 லட்சம் ஆகவும், பெட்ரோல் மற்றும் 2024 மாடலுக்கு ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெர்னா 2023 மாடலுக்கு ரூ.30,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை என மொத்தமாக ரூ.55,000 ஆகவும், 2024 வெர்னாவிற்கு ரூ. ரூ.15,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகின்றது.
ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி காருக்கு 2023 பெட்ரோலுக்கு ரூ.45,000, டீசல் மாடலுக்கு ரூ.25,000 ஆகவும், 2024 மாடலுக்கு ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரொக்க தள்ளுபடி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெனியூ எஸ்யூவி 2023 ஆண்டிற்கான மாடலுக்கு ரூ.20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை என மொத்தமாக ரூ.30,000 ஆகவும் வெனியூ என் லைன் வேரியண்டுக்கும் சலுகை உள்ளது.
ஹூண்டாய் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ.18,000 முதல் ரூ.43,000 வரை வேரியண்ட் வாரியாக மாறுபட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. ஆரா செடானுக்கு ரூ.18,000 முதல் ரூ.33,000 வரை கிடைக்கும். இறுதியாக ஐ20 காருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…