Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

எக்ஸ்டர் எஸ்யூவி உற்பத்தியை துவங்கிய ஹூண்டாய்

by automobiletamilan
June 23, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

hyundai exter suv

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான முதல் எக்ஸ்ட்ர் காரின் உற்பத்தியை சென்னை தொழிற்சாலையில் துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு மேலாக ரூ.11,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.

ஜூலை 10 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள எக்ஸ்ட்ர் காரின் போட்டியாளர்களாக  டாடா பஞ்ச், சிட்ரோன் C3, ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் உள்ளிட்ட எஸ்யூவிகள் உள்ளன.

Hyundai Exter SUV

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 81 hp பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.

EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) கொண்டுள்ள மாடலில் அனைத்து வகைகளிலும்  26 விதமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. ESC (Electronic Stability Control), VSM (Vehicle Stability Management) மற்றும் HAC (Hill Assist Control), 3-பாயின்ட் சீட் பெல்ட் & சீட்பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்), EBD உடன் ஏபிஎஸ், பர்க்லர் அலாரம் பெற்றுள்ளது.

40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்ற எக்ஸ்ட்ர் எஸ்யூவி குறிப்பாக இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியை உள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்ட்ர் விலை ரூ.6.50 – ரூ.7.00 லட்சத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan