Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது

by automobiletamilan
August 20, 2019
in கார் செய்திகள்

Hyundai Grand i10 Nios

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுக ஆரம்ப விலை 4 லட்சத்து 99 ஆயிரத்து 90 ரூபாயில் தொடங்கி 7 லட்சத்து 99 ஆயிரத்து 450 ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் நிறைவடைகின்றது.

முந்தைய கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதுடன் டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது பிஎஸ் 6 என்ஜின் பெற்ற பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் டீசல் நியோஸ் காரில் பிஎஸ் 4 என்ஜின் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காரின் தோற்ற வடிவமைப்பைப் பொறுத்தவரையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் புதிய சாண்ட்ரோவின் தோற்ற உந்துதலை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகலமான பெரிய ‘கேஸ்கேடிங் கிரில்’ உடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றதாக வரவுள்ளது. மேலும் கிரில் விளிம்புகளில் ஏங்குலர் தோற்றத்தை வெளிப்படுத்தும் எல்இடி ரன்னிங் விளக்குகளைவ பெற்றுள்ளது. மேலும், குரோம் பூச்சை பெற்ற கைப்பிடிகள் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்கள் நியோஸின் தோற்றத்திற்கு கூடுதல் கவனத்துடன் மேல் எழும்பும் வகையில் வளைவாக அமைந்துள்ளது. 6 விதமான ஒற்றை டோன் நிறங்களுடன் இரண்டு டூயல் டோன் நிறத்தை கொண்டுள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் இன்டிரியரில் ஐவரி கிரே நிற கூட்டமைப்பினை கொண்டு மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் நேர்த்தியான 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ , ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் தரமான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த மாடலில் நேர்த்தியாக ஃபினிஷ் பெற்றுள்ளது.

என்ஜின் விருப்பங்களைப் பொருத்தவரை, கிராண்ட் ஐ 10 நியோஸ் மாடலில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் 82 பிஹெச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் 5 வேக ஏஎம்டி ஆப்ஷனும் பெற்றுள்ளது. 1.2 லிட்டர் டீசல் 74 பிஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. டீசலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் கிடைக்கிறது.

Hyundai Grand i10 Nios

மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய ஐ10 நியோஸ் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு  20.7 கி.மீ., ஏ.எம்.டி 20.2 கி.மீ ஆகம்.

கிராண்ட் ஐ10 நியோஸ் டீசல் என்ஜின் மற்றும் ஏஎம்டி இரண்டிற்கும் மைலேஜ் லிட்டருக்கு 26.2 கி.மீ.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய கிராண்ட் ஐ 10 நியோஸ் காரில் இந்தியாவில் நடைமுறைக்கு வரவிரக்கும் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களான இரட்டை ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் காருக்கு நேரடியான போட்டியாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ மற்றும் வோக்ஸ்வாகன் போலோ போன்றவை விளங்குகின்றது.

Tags: Hyundai Grand i10 Niosஹூண்டாய்ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
Previous Post

ஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

Next Post

6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்

Next Post

6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version