Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விலை மற்றும் முழுவிவரம்.!

by automobiletamilan
July 11, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக மாடல் ரூபாய் 23.50 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முழுமையான எலக்ட்ரிக் கார்களின் அறிமுகம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பெரும்பாலான எலெக்டிரிக் கார்கள் டாக்சி சந்தைக்கு ஏற்றதாக கிடைக்கின்ற நிலையில் முதன்முறையாக தனிநபர்களுக்கு என பிரீமியம் வசதிகளை பெற்ற மாடாலாக கோனா எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஒருங்கினைக்கப்பட்டு (completely-knocked-down) முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்த காரில் ஈக்கோ, கம்ஃபார்ட் , மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமாக டிரைவிங் மோடுகள் உள்ளன.

கோனா பெட்ரோல்,டீசல் கார்களை போன்ற ஸ்டைலிங் அமைப்பினை பெற்றுள்ள இந்த எலெகட்ரிக் எஸ்யூவி காரின் முன்புற கிரில் தோற்றம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் தானியங்கி எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்-லைட்டுகள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. இந்தியாவுக்கான ஹூண்டாயின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வந்துள்ளது. இந்த காரில் 4 வண்ண விருப்பங்கள் (வெள்ளை, வெள்ளி, நீலம் மற்றும் கருப்பு) மற்றும் ஒரு இரட்டை தொனி வெளிப்புறம் (கருப்பு கூரையுடன் வெள்ளை) விருப்பத்தில் கிடைக்கும், இந்த நிறம் பெற்ற மாடல் சாதாரன நிறத்தை விட விலை ரூ .20,000 அதிகமாகும்.

உட்புறத்தில், 7.0 அங்குல டிஜிட்டல் டாஷ்போர்டு, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே பொருந்தக்கூடிய 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு ஆகியவை உள்ளன.

மற்ற வசதிகளாக இந்த காரில் முன் வரிசை இருக்கைகள் சூடாகவும் காற்றோட்டமாகவும் விளங்குவதுடன், ஓட்டுநரின் இருக்கை 10 வழி முறையில் எலக்ட்ரிக் வகையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது. கூடுதலாக, இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் போன்றவற்றில் லெதர் வழங்கப்பட்டுள்ளது. சன்ரூஃப்,  ஹீடேட் விங் மிரர் மற்றும் மின்சாரத்தில் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கோனா எலெக்ட்ரிக் காரில் நிலையான பாதுகாப்பு கருவிகளாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய ஈபிடி, ஈஎஸ்சி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவை அடங்கும். இந்த காரில் மெய்நிகர் என்ஜின் சவுண்ட் சிஸ்டத்தையும் (பெட்ரோல் என்ஜின் போன்ற ஒலியைப் பிரதிபலிக்கும் சாதனம்) இந்த வசதி சாலையில் உள்ள மற்ற பயனாளர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும்.

இந்தியாவில் உள்ள தனது டீலர்களில் சார்ஜிங் பாயின்ட்களை ஹூண்டாய் நிறுவ உள்ளது. மேலும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் முன்னணி நான்கு மெட்ரோ நகரங்களில் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த உள்ளது.

Tags: Hyundai IndiaHyundai Kona electricஎலெக்ட்ரிக் கார்ஹூண்டாய் கோனா
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan