சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரபலமான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்று கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் வெடித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி காரான கோனா சார்ஜிங் செய்யப்படாத நேரத்தில் வெடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பியோரோ கோசெண்டினோ புதிதாக கோனா எலெகட்ரிக் காரை வாங்கியுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது காரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து கரும்புகை வெளியானதை தொடர்ந்து தீயனைப்பு வீரர்கள் மூலம் தீ அனைக்கப்பட்டுள்ளது.
கோனா EV காரின் வெடிப்பால் அவருடைய காரேஜின் முன்புற கதவும் மற்றும் மேற்கூறை வெடித்து சாலைகளில் சிதறியுள்ளது. ஒரு வேளை கதவின் அருகே யாரேனும் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கோனா மின்சார கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 10 நாட்களில் 120க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.
கோனா எலெக்ட்ரிக் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கார் வெடிப்பு தொடர்பான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
image source – Mathieu Daniel Wagner/Radio-Canada
source – cbc.ca