ஹூண்டாய் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் விரைவில் விற்பனைக்கு வெளியாகவுள்ள கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்களின் முன்பக்க தோற்றம் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் கோனா எலக்ட்ரிக் கார் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முன்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கோனா காரின் தோற்ற அமைப்பிலிருந்து மாறுபட்ட கூர்மையான மற்றும் அகலாமாக கிரில் மாற்றப்பட்டுள்ளது. எல்இடி டி.ஆர்.எல், முன்புற பம்பர், ஸ்கிட் பிளேட் மேம்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற அமைப்பில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. என்ஜின் ஆப்ஷன், இன்டிரியர் தொடர்பான தகவலும் வெளியிடப்படவில்லை.
கோனா என் லைன் எஸ்யூவி
ஸ்போர்ட்டிவ் பம்பர் அமைப்பில் நேர்த்தியான கிரில், அகலமான ஏர்டேக் பெற்றதாக அமைந்துள்ளது.இன்டிரியர் தொடர்பான மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற ஹூண்டாய் கோனா எஸ்யூவி மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக கோனா என் லைன் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்திய சந்தையில் கோனா ஐசி என்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம்.