2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தைக்கு வரவிருக்கும் 9வது தலைமுறை கேம்ரி செடான் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேம்ரி ஆடம்பர செடான் காரில் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் இருவிதமான பவர் ஆப்ஷனில் வந்துள்ளது. முந்தைய வி6 என்ஜின் ஆனது கேம்ரி மாடலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2024 Toyota Camry
TNGA-K பிளாட்ஃபாரத்தில் வந்துள்ள புதிய டொயோட்டா கேம்ரி செடானில் புதுப்பிக்கப்பட்ட முன் பம்பரில் அகலமான ஏர் வென்ட், புதிய ஹெட்லேம்ப் மற்றும் நேர்த்தியான பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன். நேர்த்தியான மற்றும் சாய்வான ரூஃப்லைன் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டில் 19 இன்ச் மல்டி-ஸ்போக் டூயல்-டோன் அலாய் வீல் பின்புறம் புதிய டிஃப்பியூசர், டூயல் எக்ஸாஸ்ட் மற்றும் புதிய டெயில் லேம்ப் கிளஸ்டரை கொண்டுள்ளது.
இன்டிரியரில் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ள புதிய கேம்ரியில் பெரிய 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உள்ளது. தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை இருக்கும்.
ஒன்பது-ஸ்பீக்கர் JBL இசை அமைப்பு, டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 ADAS தொகுப்பு, OTA மேம்படுத்தல், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, அலுமினியம் பெடல் மற்றும் பேடல் ஷிஃப்டர் போன்ற அம்சங்களும் உள்ளன.
கேம்ரி செடானில் உள்ள 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும் கேம்ரி AWD ஆனது பின்புற அச்சுக்கு கூடுதல் மோட்டாரைப் பெற்று 232hp பவர் வழங்குகின்றது. இந்த காரில் eCVT கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு செல்ல உள்ள டொயோட்டா கேம்ரி இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.