Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஜாகுவார் லேண்ட் ரோவர் வெக்டர் தன்னாட்சி EV கார் திட்டம் அறிமுகம்

by automobiletamilan
February 20, 2020
in கார் செய்திகள்

Jaguar Land Rover project vector

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் எதிர்கால தன்னாட்சி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தீர்வினை வழங்கும் வகையில் செயற்படுத்தி வரும் ப்ராஜெக்ட் வெக்டர் (Project Vector) பற்றி முதன்முறையாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ப்ராஜெக்ட் வெக்டர் வாகனம் மின்சார டிரைவ் ட்ரைனைக் கொண்டிருப்பதுடன் தன்னாட்சி தொழில்நுட்பத்தை கொண்டதாக விளங்குகின்றது. இந்த காம்பேக்ட் கார் 4 மீட்டர் நீளத்தை பெறுகின்றது. பேட்டரி மற்றும் டிரைவ் டிரெய்ன் போன்றவே வாகனத்தின் அடிப்பகுதியில் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் நகர சூழலுக்கு ஏற்ப பயன்பாடுகளை அனுமதிக்கின்றது.

இந்த மாடலைப் பொறுத்தவரை இலகுவாக மாற்றிக் கொள்ளும் வகையிலான இருக்கை அமைப்பினை கொண்டுள்ளது. மேலும் இருக்கைகளுக்கு இடையில் தாராளமான இடவசதியை வழங்குகின்றது. தனிநபர் மட்டுல்லாமல் பகிர்தல் சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

skateboard எனும் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த மாடல் பற்றி இந்நிறுவன சிஇஓ Ralf Speth கூறுகையில், ‘பூஜ்ஜியம் இலக்கு’ (Destination Zero) என்பதனை கொண்டுள்ளது. பூஜ்ஜிய உமிழ்வு, பூஜ்ஜிய விபத்து மற்றும் பூஜ்ஜிய போக்குவரத்து நெரிசல் ஆகியவை எதிர்காலத்தை அடைய ஜே.எல்.ஆர் இலக்காகும்.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறனுடன், புதுமை விரும்பிகளுக்கு ஏற்ப அதிகப்படியான வசதிகளுடன் கூடிய நகர்ப்புற சேவைகளுக்கு என உருவாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை நாங்கள் வழங்க முடியும், இது அன்றாட வாழ்க்கையினை தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என திட்ட இயக்குனர் டாக்டர் டிம் லெவர்டன் குறிப்பிட்டுள்ளார்.

ப்ராஜெக்ட் வெக்டர் என்று அழைக்கப்படும் இந்த வாகனத்தின் புதிய ‘ஸ்கேட்போர்டு’ பிளாட்ஃபாரம் வார்விக் பல்கலைக்கழகத்தின் தேசிய தானியங்கி கண்டுபிடிப்பு மையத்தில் ( National Automotive Innovation Centre – NAIC) ஜே.எல்.ஆர் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ப் ஸ்பெத்தால் வெளிப்படுத்தப்பட்டது.

jlr project vector

Tags: Jaguar Land Rover
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version