ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய JLR லோகோ அறிமுகம்

டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய JLR லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பெயருக்கான புதிய லோகோ ஆனது தயாரிப்புகள் மற்றும் டீலர்ஷிப்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

முதல் முறையாக ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளுக்கு பொதுவாக பயன்படுத்ப்பட உள்ள அதிகாரப்பூர்வமான ஒரு லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை 200,000 அதிகமான முன்பதிவுகளை ஜே.எல்.ஆர் பெற்றுள்ளது.

New JLR Logo

புதிய லோகோவை வெளியிடும் போது, JLR  கீழ் உள்ள லேண்ட் ரோவர் பிராண்ட் நிறுவனத்தின் எஸ்யூவி டிஎன்ஏவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்” என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் லேண்ட் ரோவரில் இடம்பெறுகின்ற வர்த்தக முத்திரை ஓவல் பேட்ஜ் ஆனது தொடர்ந்து இடம்பெறும்.

டிஃபென்டர், ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஸ்கவரி பிராண்டுகளுக்கு லேண்ட் ரோவர் ஒரு “நம்பிக்கையின் அடையாளமாக”  தோன்றும் என்று தலைமை படைப்பாற்றல் (Creative) அதிகாரி ஜெர்ரி மெக்கவர்ன் குறிப்பிட்டுள்ளார்.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV Autobiography மாடலை விட , வாடிக்கையாளர்கள் தங்களிடம் ரேஞ்ச் ரோவர் ஆடம்பர் எஸ்யூவி இருப்பதாக கூறுகிறார்கள்.

நாங்கள் லேண்ட் ரோவரை விரும்புகிறோம், ஆனால் ரேஞ்ச் ரோவர் மாடலைப் போல அதிக பங்களிப்பு இல்லை. மேலும், டிஃபென்டர் பெருமளவில் வரவேற்பினை பெற்று வருகின்றது.

எலெக்ட்ரிக் கார் மட்டும் என மாற உள்ள ஜாகுவார் மறுபிறவி எடுத்தது குறித்து, தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் மார்டெல் கூறுகையில், இது தனக்கு “மிகவும் தனிப்பட்ட” மற்றும் “முடிவடையாத வணிகம்” என்று கூறினார், முதலில் ஜாகுவார் 32 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடன் இணைந்தது.

Share