கடந்த 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் FCA குழுவில் சிறப்பாக விற்பனையாகி வரும் வாகனமாக ஜீப் காம்பஸ் இருந்து வருகிறது. தற்போதைய விழாக்கால சீசனை முன்னிட்டு ஜீப் நிறுவனம் தனது புதிய காம்பஸ் பிளாக் பேக் லிமிடெட் பதிப்பு வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த வாகனங்களின் விலையாக 20.59 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) அறிவிக்கப்பட்டுள்ளது
பிளாக் பேக் பதிப்பு லிமிட்டெட் எடிசன்கள் டாப்-ஸ்பெக் வகைகளில் மட்டுமே இடம் பெற்றிருக்கும். பெயரை போலவே, பிளாக் பேக் ஸ்போர்ட்ஸ் சில பிளாக் காரின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டு ஸ்போர்ட்ஸ் லூக் கொண்ட எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறமாக பார்க்கும்போது, இந்த வாகனத்தில் விங்க் மிரர்கள் மற்றும் அலாய் வீல்களுடன் காம்பஸ் பிளாக் பேக் கிளாஸ் பிளாக் நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த அலாய் வீல்கள் 17 இன்ச்களுடன் டாப்-ஸ்பெக் கொண்ட லிமிடெட் வகைகளை ஜீப் காம்பஸ்களில் கிடைக்கும். கூடுதலாக, பிளாக் பேக் எடிசனின் ரூஃப்களும் பிளாக் நிறத்திலேயே உள்ளது. மேலும் காண்டிராஸ்ட் பாடி கலர். இந்த வாகனங்களுக்கு சிறந்த லூக்கை கொடுக்கிறது. பிளாக் பேக் எடிசன்கள் வோக்கல் ஒயிட், மினிமல் கிரே மற்றும் மெக்னேசிய கிரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
பிளாக் பேக் பதிப்பின் உட்புறத்தை பொருத்தவரை, ஜீப்களின் கேபின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும், மாற்றியமைக்கப்பட்ட டூயல் டோன், ஆப்-ஒயிட் மற்றும் பிளாக் கலர் தீம்மில் அனைத்து பிளாக் இன்டிரீயர்களுடன் குரோம் இன்செர்ட்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், சென்ட்ரல் கன்சோல் மற்றும் டோர் பேட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லிமிட்டெட் வகைகளை போன்று, காம்பஸ் பிளாக் பேக் எடிசன்கள் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், மல்டிஜெட் டீசல் இன்ஜின்களுடன் 173bhp ஆற்றலுடன் 350Nm உச்சபட்ச டார்க்யூ கொண்டிருக்கும். மேலும் இது 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டை பொருத்தவரை, ஜீப் காம்பஸ்கள் ஹூண்டாய் டஸ்கன், மஹிந்திரா XUV5OO மற்றும் டாடா ஹெக்ஸா கார்களுக்கு போட்டியாக இருக்கும். பிளாக் பேக் எடிசன்கள் ஜீப் வகைகளின் தொடக்க அறிமுகமாக இருக்கும். இது காம்பஸ் வகை வாகனங்களை .புதுப்பிக்க ;பைப்லைனாக இருக்கும்.
அமெரிக்காவை சேர்ந்த எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஜீப் நிறுவனம், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் சன்ரூஃப் மற்றும் பெரியளவிலான இன்போடேயன்ம்ன்ட் கொண்ட டச் ஸ்கீரினைகளும் பொருத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து காம்பஸ் டிரெயில்ஹாக் வகைகளை வரும் 2019ல் அறிமுகம் செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.