Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

60,000 முன்பதிவுகளுடன் செல்டோஸ் எஸ்யூவி அசத்தும் கியா மோட்டார்ஸ்

by MR.Durai
22 October 2019, 8:51 pm
in Car News
0
ShareTweetSend

kia seltos suv india

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான செல்டோஸ் அமோகமான வரவேற்பினை பெற்று வரும் நிலையில் காரின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆண்டுக்கு மூன்று லட்சம் யூனிட்டுகள் என்பதனை நான்கு லட்சமாக உயர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

ஆந்திரா மாநிலம் அனந்தப்பூரில் அமைந்துள்ள ஆலையில், தற்பொழுது இரண்டாவது ஷிஃப்ட் தொடங்கப்பட்டுள்ள மாதந்திர உற்பத்தி எண்ணிக்கை 15,000க்கு அதிகமான கார்கள் உற்பத்தி செய்யும் திறனாக உயர்த்தப்பட்டுள்ளது. எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள இந்நிறுவன விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் தலைவர் குறிப்பிடுகையில், கியா நிறுவனம் முன்பாக திட்டமிட்டிருந்த மாடலின் ஆறு மாடல்களுக்கான உற்பத்தி இலக்கு 3 லட்சம் ஆண்டு திறனை திட்டமிட்டிருந்தது. ஆனால், முதல் மாடல் (செல்டோஸ்) மட்டும் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட திறனை எடுத்துக்கொண்டால் இந்நிறுவனத்தின் வரவிருக்கும் மாடல்களுக்கு திறனை அதிகரிக்க வேண்டும். மேலும், கியா தனது மூன்றாவது ஷிஃப்ட் தொடங்குவதற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. தற்போது 3 லட்சம் யூனிட்டுகளிலிருந்து 4 லட்சம் யூனிட்டுகளாக ஆண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

செல்டோஸில் இடம்பெற்றுள்ள மூன்று என்ஜின்

இந்த காரில் பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 11.22 லட்சம் முதல் ரூபாய் 19.38 லட்சம் விலைக்குள் சென்னை ஆன்ரோடு வந்துள்ளது.

இந்நிறுவனம், அடுத்த 6 மாதங்களுக்குள் கியா கார்னிவல் எம்பிவி மற்றும் வென்யூ அடிப்படையிலான கியா 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி கார் அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.

Related Motor News

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

2025 கியா செல்டோஸ் விலை ரூ.11.13 லட்சத்தில் துவங்குகின்றது.!

சிறப்பு கிராவிட்டி எடிசனை வெளியிட்ட கியா இந்தியா

புதிய மாற்றங்களுடன் 2024 கியா செல்டோஸ் X-Line விற்பனைக்கு வெளியானது

சொனெட், செல்டோசில் புதிய GTX வேரியண்டை அறிமுகம் செய்த கியா

Tags: Kia Seltos
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan