கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கியா செல்டோஸ் காரின் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் மட்டும் 6046 புக்கிங்களை பெற்றுள்ளது. அதே சமயத்தில் இந்நிறுவனத்தின் ஆன்லைன் புக்கிங் மூலம் 1628 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள கியா நிறுவனத்தின் செல்டோஸ் காரில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் மற்றும் யூவிஓ கனெக்ட் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதியை பெற்றிருக்கும்.
கொரியாவை தலைமையிடமாக கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் துனை நிறுவனமான கியா, செல்டோஸ் எஸ்யூவிக்கு ஜூலை 16, 2019 முதல் ரூ .25,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கின்றது. இந்தியாவின் 160 நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் முன்பதிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
கியா இந்தியா வலைத்தளம் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 2 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுகின்றது. மேலும், ஆன்லைன் முன்பதிவு மூலம் 1,628 பேர் எஸ்யூவியை முன்பதிவு செய்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு பெற்ற என்ஜினை பெற உள்ள இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.
கியா மோட்டார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவருமான மனோகர் பட் கூறுகையில், “நாங்கள் தற்போது 160 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ள முன்பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், இது கியாவின் இணையற்ற மற்றும் அசாதாரண பிராண்ட் அங்கீகாரம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளத்தக்கது ” என்பதற்கு இது ஒரு சான்றாகும், இதனை அடைய எங்கள் பிராண்ட் பிரச்சாரம் பெரிதும் உதவியுள்ளது.
பட் மேலும் கூறுகையில், “எங்கள் மிட் ரேஞ்ச் எஸ்யூவி, செல்டோஸ் விற்பனை தொடங்கும் முதல் நாளே பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கும், அனைத்து பவர் ட்ரெயின்களிலும் மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த முயற்சி சிறப்பான ஒன்றாக அமைகிறது.”
தொடர்ந்து அவர் கூறுகையில், “நாங்கள் இந்திய சந்தையிலும், சிறப்பான செயல்திறனை வழங்கும் முன்னணி தயாரிப்புகளையும் விற்பனை செய்ய கடமைப்பட்டுள்ளோம். எங்களின் ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய்ம் திறன் பெற்றுள்ளது. எனவே, சரியான நேரத்தில் டெலிவரி வழங்குவதற்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும் நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முழுமையாக படிங்க – கியா செல்டோஸ் எஸ்யூவி சிறப்புகள்
எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் விலைக்குள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…