இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய RDE விதிமுறைகளுக்கு ஏற்ப கியா மோட்டார் நிறுவன கார்களில் மேம்பாடு வழங்கப்பட்டு வரும் நிலையில் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கார்களில் இடம்பெற்றிருக்கின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ஐஎம்டி மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் விற்பனையில் உள்ளது.

தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற சோனெட் காரில் இடம்பெற்றிருந்த 100 ஹெச்பி மேனுவல் டீசல் நீக்கப்பட்டு இப்பொழுது 115 ஹெச்பி ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கின்றது. மற்றபடி, 83hp, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 120hp, 1.0 லிட்டர் டர்போ வேரியண்டுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

அடுத்த மாடல், கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றிருந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.4 லிட்டர் டர்போ என்ஜின் என இரண்டும் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு உள்ளது. 1.4 லிட்டர் டர்போ என்ஜினுக்கு மாற்றாக புதிய அல்கசார் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும்.

இறுதியாக கியா கேரன்ஸ் காரில் செல்டோஸ் போலவே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.4 லிட்டர் டர்போ என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி ஆப்ஷனில் கிடைக்கும். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும்.