Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது

by automobiletamilan
August 22, 2019
in கார் செய்திகள்

kia seltos suv

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக கியா செல்டாஸ் எஸ்யூவி கார் ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்த காரில் பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ்ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

kia seltos suv india

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

செல்டோஸ் பாதுகாப்பு வசதிகள்

செல்டோஸ் காரில் VSM (வாகன நிலைத்தன்மை மேலாண்மை), ESC (எலக்ட்ரானிக் வேகக் கட்டுப்பாடு), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), BAS (பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம்) போன்ற அம்சங்களுடன் வருகிறது. மற்றும் HAC (ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல்). ISO-FIX குழந்தை இருக்கை நங்கூரத்துடன் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 6 பார்வை திசைகளைக் கொண்ட 360 டிகிரி கேமராவுடன்  முன் பார்வை, பின்புற பரந்த பார்வை, முன் மேல் பார்வை, பின்புற மேல் பார்வை, முன் பக்க காட்சி மற்றும் பின்புற பக்க காட்சியுடன் வருகிறது.

எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளகின்றது. முன்பதிவு தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 32,035 கார்களுக்கான முன்பதிவு நடைபெற்றுள்ளது.

kia seltos suv

Kia Seltos Price

– 1.5 Petrol

HTE – Rs. 9.69 lakhs
HTK – Rs. 9.99 lakhs
HTK+ – Rs. 11.19 lakhs
HTX – Rs. 12.79 lakhs
HTX CVT – Rs. 13.79 lakhs

– 1.5 Diesel

HTE – Rs. 9.99 lakhs
HTK – Rs. 11.19 lakhs
HTK+ – Rs. 12.19 lakhs
HTK+ AT – Rs 13.19 lakhs
HTX – Rs. 13.79 lakhs
HTX+ – Rs. 14.99 lakhs
HTX+ AT – Rs. 15.99 lakhs

– 1.4 Turbo Petrol

GTK – Rs. 13.49 lakhs
GTX – Rs. 14.99 lakhs
GTX DCT – Rs. 15.99 lakhs
GTX+ – Rs. 15.99 lakhs

(all prices, ex-showroom)

Tags: Kia MotorsKia Seltosகியா செல்டோஸ்கியா மோட்டார்ஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version