ரூ.25,000 கட்டணமாக செலுத்தி கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சோனெட் எஸ்யூவி காருக்கான முன்பதிவை தனது இணையதளத்தின் மூலமாக அல்லது டீலர்களிடமும் துவங்கியுள்ளது. செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி என இரு மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது காராக சோனெட்டினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள சொனெட் எஸ்யூவி மாடல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உட்பட சுமார் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் ஆண்டில் 1,00,000 யூனிட்டுகளை விற்பனை செய்யவும், 50,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
சோனெட் என்ஜின்
சொனெட்டில் வழங்கப்பட உள்ள மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என கிடைக்க உள்ளது. இதில் 83 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் டெக் லைன் வேரியண்டில் மட்டும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருக்கும்.
120 PS மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் மூன்று விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதில் 6 வேக மேனுவல், 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டிசிடி என வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் பிரத்தியேகமாக ஜிடி லைன் வேரியண்ட்டில் மட்டுமே பெற்றிருக்கும்.
100 PS மற்றும் 240 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற சோனெட்டில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். இதில் டெக் லைன் மாடல் மேனுவல் பெற்றதாகவும், ஜிடி லைன் வேரியண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இடம்பெறும்.
மேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள் ? கியா சோனெட்