4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்று ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற கியா சொனெட் எஸ்யூவி ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டின் பிரசத்தி பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ உட்பட மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ள புதிய காரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் கியா UVO நுட்பம் உட்பட ஐஎம்டி கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற உள்ளது.
பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் சற்று பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.
இந்த காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ், 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் பதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது.
மேலும் படிங்க – கியா ஐஎம்டி கியர்பாக்ஸ் என்றால் என்ன?
உற்பத்தி நிலை மாடல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதனை தொடர்ந்து அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2020 மத்தியில் கியா சொனெட் விலை அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது.