ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 3 டோர் மற்றும் 5 டோர் பெற்ற லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 மற்றும் 110 மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 300 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிமுக விலை அறிவிக்கப்பட்டிருந்த டிஃபென்டர் எஸ்யூவி விலையை விட ரூ.4 லட்சம் கூடுதலாக அமைந்துள்ளது. முன்பாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விலை குறைவாக கிடைக்கும்.

லேண்ட் ரோவர் டிஃபென்டர்

300 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் வழங்கும் P300 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 8.1 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை டிஃபென்டர் 110 மாடல் எட்டும் அதே நேரத்தில் டிஃபென்டர் 90 வேரியண்ட் 8.0 விநாடில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற லேண்ட் ரோவர் ட்ரெயின் சிஸ்டத்துடன் வந்துள்ளது. பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

சிறப்பான வசதிகளை பெற்ற லேண்ட் ரோவரின் புதிய Pivi ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று அனைத்து சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிளுடன் வருகிறது. 10 அங்குல தொடுதிரை காட்சி, ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஒருங்கிணைப்புடன் கிடைக்கின்றது.  வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு அனைத்து வேரியண்டிலும் கிடைப்பதுடன் ஓவர் தி ஏர் மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் விலை பட்டியல்

2020 Land Rover Defender Prices Ex-sh
90 ரூ.73.98 லட்சம்
90 S ரூ.77.37 லட்சம்
90 SE ரூ.79.94 லட்சம்
90 HSE ரூ.83.91 லட்சம்
90 First Edition ரூ.84.63 லட்சம்
110 ரூ.79.94 லட்சம்
110 S ரூ.83.36 லட்சம்
110 SE ரூ.86.64 லட்சம்
110 HSE ரூ.90.46 லட்சம்
110 First Edition ரூ.89.63 லட்சம்

 

web title : Land Rover Defender 90 & 110 Launched in India

For the latest Tamil car news and Truck News, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.