3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் என இரண்டிலும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் எஸ்யூவி ரூபாய் 66.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 2020-ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் ஸ்டைலிஷான வடிவமைப்பினை பெற்றுள்ள புதிய லேண்ட் ரோவரின் டிஃபென்டரில் 5 கதவுகளை கொண்ட டிஃபென்டர் 110 மற்றும் 3 கதவுகளை கொண்ட டிஃபென்டர் 90 என இரு மாடல்களும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள மாடலில் நான்கு சிலிண்டர் பெற்ற P300 என்ஜின் பெற்றுள்ளது.
300 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் வழங்கும் P300 என்ஜின் 8.1 விநாடிகளில் 0-100 கிமீ வேகத்தை டிஃபென்டர் 110 மாடல் எட்டும் அதே நேரத்தில் டிஃபென்டர் 90 8.0 விநாடில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற லேண்ட் ரோவர் ட்ரெயின் சிஸ்டத்துடன் வந்துள்ளது.
சிறப்பான வசதிகளை பெற்ற லேண்ட் ரோவரின் புதிய Pivi ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று அனைத்து சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிளுடன் வருகிறது. 10 அங்குல தொடுதிரை காட்சி, ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஒருங்கிணைப்புடன் கிடைக்கின்றது. வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு அனைத்து வேரியண்டிலும் கிடைப்பதுடன் ஓவர் தி ஏர் மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.
2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் விலை பட்டியல்
2020 Land Rover Defender | Prices Ex-sh |
---|---|
90 | ரூ.69.99 லட்சம் |
90 S | ரூ.73.41 லட்சம் |
90 SE | ரூ.76.61 லட்சம் |
90 HSE | ரூ.80.43 லட்சம் |
90 First Edition | ரூ.81.30 லட்சம் |
110 | ரூ.76.57 லட்சம் |
110 S | ரூ.79.99 லட்சம் |
110 SE | ரூ.83.28 லட்சம் |
110 HSE | ரூ.87.10 லட்சம் |
110 First Edition | ரூ.86.27 லட்சம் |