Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் லெக்சஸ் NX 350h Overtrail எடிசன் விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
6 April 2024, 10:17 am
in Car News
0
ShareTweetSend

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள NX 350h Overtrail எடிசன் புதிய மாடல் விலை ரூபாய் 71.77 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்போட்டிவ் மற்றும் மிகவும் முரட்டுத்தனமாக அமைந்திருக்கின்றது.

Lexus NX 350h

ஓவர்ட்ரெயில் எடிசன் ஆனது சிறப்பு மூன் டெசர்ட் நிறத்தை பெறுகின்றது மிகவும் யூனிக்கான இந்த நிறத்துடன் கருமை நிறத்தை பெற்ற கிரில், ரூஃப் ரெயில், கதவு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள். போன்றவற்றில் அமைந்திருக்கின்றது.

Tazuna காக்பிட் பெறுகின்ற என்எக்ஸ் 350 ஹெச் காரில் இரட்டை நிற கலவை பெற்ற டேஸ்போர்டில் 14-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், Mark Levinson 17 ஸ்பீக்கர்களை கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ADAS பாதுகாப்பு தொகுப்பில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் அலர்ட் மற்றும் எட்டு ஏர்பேக்குகள் கொண்டிருப்பதுடன் கனேக்டேட் கார் நுட்பத்துடன் பாதுகாப்பு சார்ந்த DCM (Data Communication Module) உள்ளது.

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற 18 அங்குல அலாய் வீல் உடன் 235/60 டயர் பெற்றதாகவும், சிறப்பாக கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கும் அடாப்டிவ் வேரிபிள் சஸ்பென்ஷன் உள்ளது.

லெக்சஸ் NX 350h எஸ்யூவி மாடலில் 259-Volt பேட்டரியுடன் கூடிய ஹைபிரிட் 2.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 240 bhp மற்றும் 239 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. CVT உடன் இணைக்கப்பட்டு பேடல் ஷிஃப்டர் பெறுகிறது.

Related Motor News

₹ 2 கோடியில் லெக்சஸ் LM 350h விற்பனைக்கு அறிமுகமானது

ரூ. 2.23 கோடியில் லெக்சஸ் LX 570 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.2.32 கோடியில் லெக்சஸ் LX 450d விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் லெக்சஸ் RX 450h எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்..!

இந்தியாவில் லெக்சஸ் ES 300h ஹைபிரிட் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்கள் இன்று அறிமுகம்

Tags: LexusLexus NX 350h
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

vinfast vf7 car

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

vinfast vf6

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan