இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களின் விலை அதிகபட்சமாக ஒரு சில மாடல்கள் விலை ரூபாய் 36,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை 1, 2019 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள AIS 145 பாதுகாப்பு விதிகளின் படி பயணிகள் கார்களின் அடிப்படையான இரண்டு காற்றுப்பை, பயணிகள் இருக்கை பட்டை நினைவூட்டல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை அடிப்படை பாதுகாப்பு அம்சமாக இணைக்கப்பட வேண்டும்.
மஹிந்திரா கார் விலை உயர்வு
மஹிந்திராவின் முன்னணி மாடல்களான ஸ்கார்ப்பியோ, பொலிரோ, TUV300 மற்றும் KUV100 NXT போன்ற மாடல்கள் விலை அதிகப்படியாகவும், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி 500 போன்றவை மிக குறைவாகவும், புதிதாக விற்பனைக்கு வந்த எக்ஸ்யூவி300 விலையில் மட்டும் எந்த மாற்றங்களும் இல்லை.
ஜூலை 1 முதல் புதிய விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் மஹிந்திரா தனது பிரபலமான ஆஃப்ரோடர் மாடலான தார் எஸ்யூவி காரில் மஹிந்திரா தார் 700 என்ற சிறப்பு பதிப்பில் 700 கார்களை மட்டும் விற்பனை செய்ய உள்ளது.
ரூ.9.99 லட்சத்தில் கிடைக்கின்ற மஹிந்திரா தார் 700 எஸ்யூவி மாடலில் தார் 700 பேட்ஜ் பதிக்கப்பட்டு மஹிந்திராவின் தலைவர் ஆனந்த மஹிந்திரா கையெழுத்திடப்பட்டுள்ளது. இதுதவிர, சில்வர் நிற பூச்சை பெற்ற முன்புற பம்பர் கொண்டுள்ளது. கருப்பு நிற கிரில், முன்புற இருக்கைகளில் தார் லோகோ, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றை கொண்டுள்ளது.