மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணி

மஹிந்திரா, ஃபோர்டு கூட்டணியில் உருவாக உள்ள முதல் எஸ்யூவி (C-segment SUV) கார் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் விற்பனை செய்ய இரு நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் அடுத்த தலைமுறை மாடலாக இந்த சி பிரிவு எஸ்யூவி விளங்கும். இந்த காரின் என்ஜின் மற்றும் பிளாட்ஃபாரம் போன்றவற்றை மஹிந்திரா நிறுவனம் உருவாக்க உள்ளது.

மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணி

இரு நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள ஒபந்தத்தின் மூலமாக மாடல்கள் தயாரிப்பதற்கான செலவுகள் மற்றும் பொருளாதரம் சார்ந்த லாபத்தை பெற நக்கமாக கொண்டு இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக, மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் குன்கா குறிப்பிட்டுள்ளார்.

முதல் எஸ்யூவி மாடலாக தயாரிக்கப்பட உள்ள சி பிரிவு சந்தை எஸ்யூவி காரானது, மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி500 அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள அடுத்த தலைமுறை மாடலாகும், இதற்கான குறியீட்டு பெயர் W601 என அறியப்படுகின்றது. இந்த மாடலை ஃபோர்டு நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. மற்ற நிறுவனங்களை போல பேட்ஜ் மாற்றி விற்பனை செய்யாமல், பிளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் போன்றவற்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டு ஃபோர்டு C-SUV, இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் அமைப்பினை ஃபோர்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ள உள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா நிறுவன சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதே உற்பத்தி பிரிவில் ஃபோர்டு எஸ்யூவி காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஃபோர்டு எஸ்யூவி

இந்த இரு எஸ்யூவி கார்களுக்கும் ஃபோர்டு நிறுவனம், ஸ்மார்ட் டெக்னாலாஜி சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்க உள்ளது. இந்த சிஸ்டத்தில் இணையத்தினை சார்ந்த பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டின் இறுதியில் மஹிந்திரா-ஃபோர்டு கூட்டணியின் முதல் எஸ்யூவி வெளியாகும். அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் ஃபோர்டு சி எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.