பயணிகள் வாகங்களின் விலையை ரூ30,000 அல்லது 2 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக மகேந்திரா அண்ட் மகேந்திரா லிமிட்டே அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்த்து 2018ம் ஆண்டு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து பேசிய மகேந்திரா அண்ட் மகேந்திர நிறுவன ஆட்டோமேத்டிவ் பிரிவு தலைவர் ராஜன் வாத்ஹிரா தெரிவிக்கையில், வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வை தொடர்ந்து, நாங்கள் இந்த விலை உயர்வை திட்டமிட்டுள்ளோம். சில மாடல்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, ஏற்கவே உள்ள விலையை விட 2 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

இதே காரணத்திற்காக பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை 2-4 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன.

இந்த மாத துவக்கத்தில், தங்கள் கார்களின் விலையை அடுத்த மாதம் முதல் 35,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாக ஹோண்டா கார் இந்தியா அறிவித்தது.

தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட்-டும் தங்கள் காரான கிராண்ட் i10 விலையில் 3 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் அடுத்த மாதம் முதல் வாகன விலை உயர்த்த உள்ளதை குறிப்பிட்டுள்ளது.

ஆடம்பர கார்கள் வரிசையில், ஆடி, JLR மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் கார்கள் கார்களின் விலையை 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை உயர்த்த உள்ளதாகவும், இந்த விலை உயர்வு சுங்க கட்டண உயர்வை தொடர்ந்தே மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.