Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுக விபரம்

by automobiletamilan
June 27, 2023
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

thar suv

வரும் 15, 2023 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த முறை தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஏற்கனவே, விற்பனையில் உள்ள 3 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் மாடலின் அடிப்படையில் 5 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி ஆனது நேரடியாக இந்திய சந்தையில் மாருதி சுசூகி ஜிம்னி, வரவிருக்கும் ஃபோர்ஸ் கூர்க்கா 5 கதவுகளை பெற்ற ஆகியவற்றை எதிர்கொள்ளலாம்.

Mahindra Thar 5-Door SUV

5 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி ஆனது புதிய பெயர் அர்மடா என அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலும் கூறப்படுகின்றது.

மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5000 RPMல் 150hp குதிரைத்திறன் மற்றும் 1500-3000rpm-ல் 320 Nm முறுக்குவிசை (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 Nm முறுக்குவிசை (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM-ல் 130 hp குதிரைத்திறன் மற்றும் 300 Nm முறுக்குவிசை திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO (ஆட்டோ மற்றும் பண்ணை துறை) ராஜேஷ் ஜெஜூரிகர் முன்பே குறிப்பிட்டிருந்தார். 5 கதவு தார் இந்தியாவில் அறிமுகத்தை 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

Tags: Mahindra Thar
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan