Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஒரே மாதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 அள்ளிய 13,000 முன்பதிவுகள்

by automobiletamilan
March 16, 2019
in கார் செய்திகள்

mahindra xuv300

விலைக்கேற்ற வசதிகளை கொண்ட மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்த ஒரே மாதத்தில் 13,000 முன்பதிவுகளுடன், 2.50 லட்சத்துக்கு மேற்பட்ட விசாரிப்புகளை பெற்றதாக விளங்கும் எக்ஸ்யூவி300 மாடல் 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற மாடல்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக உள்ளது.

ரூபாய் 7 லட்சத்து 90 ஆயிரம் முதல் ரூபாய் 11 லட்சத்து 99 ஆயிரம் வரையிலான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான தேர்வுகளில் கிடைக்கின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் பல்வேறு சிறப்பு வசதிகள கொண்டுள்ளது.

எக்ஸ்யூவி300 காரின் முக்கிய அம்சங்கள்

mahindra xuv300

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா நெக்ஸான் உட்பட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடலுக்கு எதிராக எக்ஸ்யூவி 300 எஸ்யூவி போட்டியாக விளங்குகின்றது.

110 ஹார்ஸ் பவர் மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6  வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும்.

டீசல் தேர்வில் 115 ஹார்ஸ் பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.

Mahindra-XUV300-7-airbags
Mahindra XUV300 SUV 7 airbags

தற்போது காத்திருப்பு காலம் இந்த எஸ்யூவி காருக்கு தற்போது மூன்று வாரங்களாக உள்ள நிலையில், மொத்தமாக 13,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் மொத்த முன்பதிவில் 75 சதவீதம் அளவிற்கு டாப் வேரியன்ட் ஆக உள்ளது. மஹிந்திரா நிறுவனம் அறிக்கையில் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட எஸ்யூவி மாடல்களில் 40 சதவீதம் சந்தையை எக்ஸ்யூவி 300 கைப்பற்றியுள்ளது.

mahindra xuv300 rear view

Tags: MahindraMahindra XUV300மஹிந்திரா XUV300
Previous Post

புதிய பஜாஜ் பல்சர் 180F பைக் விற்பனைக்கு வெளியானது

Next Post

ஏப்ரல் 3-ல் இந்தியாவில் முதல் சிட்ரோயன் கார் அறிமுகம்

Next Post

ஏப்ரல் 3-ல் இந்தியாவில் முதல் சிட்ரோயன் கார் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version