மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட XUV700, ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV300, XUV400 EV, தார் எஸ்யூவி, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றுக்கு மொத்தமாக 2,66,000 அதிகமான முன்பதிவுகள் நாடு முழுவதும் டெலிவரிக்கு காத்திருக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் இணைந்து) மொத்தமாக 1.19 லட்சம் முன்பதிவுகளில் மிகப்பெரிய பேக்லாக் உள்ளது, அதே சமயம் பொலிரோ (பொலேரோ மற்றும் பொலேரோ நியோ இணைந்து) மிகக் குறைவாக 9,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ

முந்தைய தலைமுறை ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி காருக்கு 5 முதல் 6 மாதங்களாக காத்திருப்பு காலம் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்கார்பியோ N காரின் Z8 வேரியண்ட் 26 மாதங்கள் வரை டெலிவரிக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்தப்படியாக Z8 L (MT) மாடல் குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 5 முதல் 6 மாதங்களாக உள்ளது. Z8 L (AT) வேரியண்டிற்கு காத்திருப்பு காலம் 18 மாதங்களாக உள்ளது. அதிகபட்சமாக 1,19,000 முன்புதிவுகள் நிலுவையில் உள்ளன.

XUV700 காருக்கு MX மற்றும் AX3 குறைந்த விலை வேரியண்ட் மாடல்களுக்கு 15 நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஆனால், AX7 மற்றும் AX7L டாப் வேரியண்டுகளுக்கு 15 முதல் 16 மாதங்கள் ஆக காத்திருப்பு காலம் உள்ளது.  டீசல் வேரியண்டுகளுக்கான காத்திருப்பு காலம் மிக அதிகமாக உள்ளது.

XUV300 மற்றும் XUV400 என இரண்டுக்கும் 23,000 க்கு அதிகமான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக XUV400 எலெக்ட்ரிக் காருக்கு 13,000 மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தார் எஸ்யூவி காருக்கான முன்பதிவை பொறுத்தவரை 2WD கொண்ட டீசல் என்ஜினுக்கு 16 முதல் 18 மாதங்கள் வரை உள்ளது. 4X4 வேரியண்டுகளை பொறுத்தவரை ஒரு மாதம் மட்டுமே உள்ளது.

பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரண்டு மாடல்களும் 9,000 முன்பதிவு நிலுவையில் உள்ளன.