மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி மாடலில் கூடுதலாக பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை குறைந்த விலையில் ஆரம்பநிலை MX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
சந்தையில் உள்ள நடுத்தர எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ள இந்த புதிய வேரியண்டின் விலை அனேகமாக ரூ.15.80 லட்சம் விலையில் வெளியிடப்படலாம். இந்த விலை போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தலாம். தற்பொழுது மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆரம்ப விலை ரூ.13.59 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட் ரூ.14.59 லட்சத்தில் துவங்குகின்றது. XUV700 ஆட்டோமேடிக் ஆனது AX டிரிம்களில் உள்ள AX3, AX5 மற்றும் AX7 ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கின்றது
இந்த எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 197 bhp மற்றும் 380 Nm டார்க்கை உருவாக்குகிறது, அதே நேரத்தில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 153 bhp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 182 bhp மற்றும் 450 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றது.
குறைந்த விலை MX வேரியண்ட் என்பதனால் 8-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, USB சார்ஜிங் போர்ட், 2வது வரிசை ஏசி, டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங், ஹாலஜென் ஹெட்லேம்ப் மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM பெறும் வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 ஆட்டோமேட்டிக் 5 இருக்கைகளை பெற்று மற்ற போட்டியாளர்களான ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரை எதிர்கொள்ள உள்ளது.