பிரபலமான மாருதி பலேனோ டீசல் காரின் விலை உயர்ந்தது

2019-maruti-suzuki-Baleno-RS

புதிய மாருதி பலேனோ, பலேனோ ஆர்எஸ் டீசல் காரின் விலையை மாருதி சுசூகி நிறுவனம், அதிகபட்சமாக ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பிஎஸ் 6 என்ஜின் பெற்ற டியூவல் ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் காரை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டூயல் ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் மாடல் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட மாடல் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ. 8.90 லட்சம் வரையிலான விலையில் அமைந்துள்ளது.

மாருதி பலேனோ டீசல் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் முன்னணி வகிக்கும் பலேனோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பின் சமீபத்தில் பெற்ற இந்த கார் பல்வேறு வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

373e8 2019 maruti suzuki baleno dashboard

பலேனோ RS காரில் 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெற்ற பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 NM ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது. பலேனோ ஆர்எஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.

74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

வேரியன்ட்விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
பலேனோ Sigmaரூ. 6.74 லட்சம்
பலேனோ Deltaரூ. 7.52 லட்சம்
பலேனோ Zetaரூ. 8.13 லட்சம்
பலேனோ Alphaரூ. 8.73 லட்சம்
பலேனோ RSரூ. 8.89 லட்சம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *