இந்திய சாலையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி சியரா கார் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த மாதம் மாருதி ஆலையில் சோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்ட ஜிம்னி காரே இப்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
சர்வதேச அளவில் ஐரோப்பா நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஜிம்னி சியரா மூன்று டோர் மற்றும் ஐந்து டோர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது. தற்போது இந்திய சந்தையில் சோதனை ஓடத்தில் ஈடுப்பட்டிருக்கின்ற மாடல் மூன்று கதவுகளை கொண்டதாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல சுசூகி திட்டமிட்டுள்ளது.
மாருதி ஜிம்னி அறிமுகம் எப்போது ?
முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வந்த இந்த மாடல் இந்திய சந்தையில் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற மாருதி சுசூகி ஜிம்னி சியரா கார் 5 கதவுகளை கொண்டதாகவும், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இன்ஜின் இப்போது விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, XL6 மற்றும் சியாஸ் காரில் இடம்பெற்றுள்ளது.
103 ஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற மஹிந்திரா தார் எஸ்யூவி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா போன்றவற்றை நேரடியாக மாருதியின் ஜிம்னி சியரா எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் நெக்ஸா டீலர்கள் வாயிலாக ரூ.10 லட்சத்திற்கு கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Web title : Maruti Suzuki Jimny Sierra Spotted Testing In India