ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு 24,500க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளது. ஜிம்னி காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கார்களுக்கு 6 முதல் 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாருதி ஜிம்னி எஸ்யூவி காரில் Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ரிவர்ஸ் கேமரா, ESP மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.
சுசூகி கார்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.
ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகி காரின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…