ஜிம்னி எஸ்யூவிக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகையை அறிவித்த மாருதி சுசூகி

மாருதி ஜிம்னி எஸ்யூவி

ரூ.12.74 லட்சத்தில் துவங்குகின்ற ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு போதிய வரவேற்பின்மையால் தொடர்ந்து அறிமுகம் முதலே சலுகைகளை அறிவித்து வருகின்ற மாருதி சுசூகி தற்பொழுது ரூ.2.75 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது.

இருப்பில் உள்ள ஜிம்னி மாடல்களின் எண்ணிக்கையை பொறுத்து சலுகை வழங்கப்படுகின்றது. ஒரு சில டீலர்களில் அதிகபட்ச விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,00,000 ரொக்க தள்ளுபடி, சில ஆக்செரீஸ் வாங்குகையில் தள்ளுபடி மற்றும் போனஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட 5 டோர் ஜிம்னி ஆஃப்ரோடு சாகங்களுக்கு ஏற்றதாக விளங்கினாலும், தார் எஸ்யூவி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா என இரண்டும் கடும் சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.

ஜிம்னி என்ஜின் விபரம்

1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *